கடத்தப்பட்ட மேயர் விடுவிப்பு: பதிலுக்கு ரஷ்யா முன்வைத்த நிபந்தனை!
கடத்தப்பட்ட உக்ரேனிய மேயர் ஒருவர் கைதிகள் சிலரை பரிமாற்றம் செய்த பிறகு ரஷ்ய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறைப்பிடிக்கப்பட்ட ஒன்பது ரஷ்ய வீரர்களுக்கு பதிலாக மெலிடோபோல் மேயர் இவான் ஃபெடோரோவ் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய துருப்புகளால் மெலிடோபோல் நகரம் கைப்பற்றப்பட்ட பின்னர் மார்ச் 11ம் திகதி, தங்களுக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி ஃபெடோரோவ் கடத்திச் செல்லப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட பின்னர் மேயர் ஃபெடோரோவ் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை தொடர்புகொண்டு பேசியுள்ளார். மட்டுமின்றி, சிறப்பு நடவடிக்கையின் ஊடாக மேயர் ஃபெடோரோவ் ரஷ்ய துருப்புகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், உங்களை மீட்டெடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்... உங்கள் குரலைக் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குறித்த கடத்தல் சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம் என்று கூறிய ஜனாதிபதி, ரஷ்யாவின் செயல்கள் பயங்கரவாதமாக கருதப்படும் என்றார்.