ஆறு வயதில் மாயமான சிறுமி... தாயாரின் கொடுஞ்செயல் அம்பலம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் 2019ல் மாயமான 6 வயது சிறுமி, குடியிருப்பு ஒன்றின் படிக்கட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நியூயார்க்கின் Hudson Valley பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே செவ்வாய்க்கிழமை பொலிசார் குறித்த சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமி ஆரோக்கியத்துடன் காணப்பட்டதாகவும், 2019 ஜூலை மாதம் அவருக்கு 6 வயதாக இருக்கும் போது சிறுமி மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரிந்து வாழும் சிறுமியின் பெற்றோரால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று முதலில் சந்தேகித்ததாக பொலிசார் தெரிவித்தனர். இந்த நிலையில், சிறுமியின் தாயாரின் குடியிருப்பை தீவிர சோதனைக்கு உபடுத்திய பொலிசார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
அந்த குடியிருப்பின் தரைத்தளத்தில் அமைந்துள்ள படிக்கட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு முதற்கட்ட மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு, அவரது மூத்த சகோதரியிடம் பொலிசார் ஒப்படைத்துள்ளனர். மேலும், சிறுமியின் தாயார் உட்பட மூவர் மீது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிந்துள்ளனர்.