கடத்தல்காரர் காரில் கிடந்த துண்டு காகிதம்: 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட 13 வயது சிறுமி
அமெரிக்காவின் டெக்சாஸில் கடத்தப்பட்ட 13 வயது சிறுமி “உதவிய கோரிய பிறகு” மூன்று நாட்களுக்கு பிறகு கலிபோர்னியாவில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட 13 வயது சிறுமி
அமெரிக்காவின் டெக்சாஸில் மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்ட 13வயது சிறுமி மூன்று நாட்களுக்கு பிறகு கலிபோர்னியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
கடத்தல்காரரின் காரில் இருந்து "உதவுங்கள்" என்று 13 வயது சிறுமி பதாகையை தாங்கி உதவி கோரியதை அடுத்து அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
NBC Los Angeles
லாங் பீச் நகரத்தில் ஜூலை 9ம் திகதி சிறுமி ஒருவர் காரின் உள்ளே இருந்து கசங்கிய காகித துண்டில் உதவி என்று எழுதி கவனத்தை ஈர்க்க முயற்சித்த பிறகு, அவரை பார்த்த மனிதர் உடனடியாக 911க்கு அழைப்பு விடுத்தார்.
சிறுமி மீட்கப்பட்ட கார் சலவை கடையின் பார்க்கிங் இருந்த நிலையில், சிறுமியை கடத்தியவர் சலவை கடையை பயன்படுத்தி கொண்டு இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
61 வயது முதியவர் கைது
இந்நிலையில் சிறுமியை கடத்தியது மற்றும் வேறு சில குற்றச்சாட்டுகளின் கீழ் ஸ்டீவன் ராபர்ட் சப்லான் என்ற 61 வயது சந்தேக நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
AP/US Department of Justice
சிறுமி ஜூலை 6ம் திகதி டெக்சாஸின் San Antonio பேருந்து நிலையத்தில் இருந்து துப்பாக்கி முனையில் காரில் கடத்தப்பட்டு இருப்பதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமி கலிபோர்னியாவுக்கு கடத்தப்பட்ட போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |