கெய்லின் இமாலய சாதனையை முறியடித்த பொல்லார்ட்
டி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கிரேன் பொல்லார்ட் படைத்தார்.
கீரோன் பொல்லார்ட்
மேஜர் லீக் தொடரின் வாஷிங்டன் ப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில், எம்ஐ நியூயார்க் அணி வீரர் கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) சதம் விளாசினார்.
56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த கிறிஸ் கெய்லின் (Chris Gayle) சாதனையை முறியடித்தார்.
கெய்ல் 14,562 ஓட்டங்கள் குவித்த நிலையில், பொல்லார்ட் 14,582 ஓட்டங்கள் எடுத்தார். அதில் 2 சதங்கள், 67 அரைசதங்கள் அடங்கும்.
இந்த பட்டியலில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், விராட் கோஹ்லி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
டி20யில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள்
- கீரோன் பொல்லார்ட் - 14,582 ஓட்டங்கள்
- கிறிஸ் கெய்ல் - 14,562 ஓட்டங்கள்
- அலெக்ஸ் ஹேல்ஸ் - 14,449 ஓட்டங்கள்
- ஜோஸ் பட்லர் - 14,371 ஓட்டங்கள்
- டேவிட் வார்னர் - 14,284 ஓட்டங்கள்
- விராட் கோஹ்லி - 14,218 ஓட்டங்கள்

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |