உயர் தலைவர் காமெனி, அவரது மகனைக் கொலை செய்ய ட்ரம்ப் நிர்வாகம் ரகசிய உத்தரவு
அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் செவிசாய்க்கவில்லை என்றால், ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி மற்றும் அவரது மகன் மொஜ்தபாவைக் கொல்ல ட்ரம்ப் திட்டம் வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கொலைப் பட்டியல்
அலி காமெனிக்கு பிறகு உயர் தலைவர் பொறுப்புக்கு மொஜ்தபா தெரிவு செய்யப்படுவார் என்ற நிலையில், அமெரிக்கா அவருக்கு குறி வைத்துள்ளது.

அத்துடன், அலி காமெனியுடன் உயர் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் பலரும் கொலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ட்ரம்ப் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவக் கப்பல் படையை தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகளைக் குறிப்பிட்டு, ஈரானியர்கள் தாக்குதலைத் தடுக்க விரும்பினால், அமெரிக்காவால் மறுக்க முடியாத ஒரு வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளதாக Axios தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானியர்கள் வாய்ப்புகளைத் தவறவிட்டு, விளையாட்டுக் காட்டினால், அது அமெரிக்காவின் பொறுமையை சோதிக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், மோசமான சூழ்நிலைக்குத் தயாராக இருப்பதாகவும், ஈரான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை என்றால், ட்ரம்பிற்கு ஏராளமான தெரிவுகளை பென்டகன் வழங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதில் ஒன்று, அலி காமெனி மற்றும் அவரது மகனுடன், உயர்மட்ட தலைவர்களைப் படுகொலை செய்வது என ட்ரம்ப் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதலை நோக்கி வேகமாக
இருப்பினும் ட்ரம்ப் என்ன முடிவெடுப்பார் என்பது மர்மமாகவே உள்ளது. காமெனியையும் அவரது மகனையும் கொல்லும் திட்டம் பல வாரங்களுக்கு முன்பே ட்ரம்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான அவர்களின் மோதலுக்கு இராஜதந்திர தீர்வுக்கான நம்பிக்கைகள் மங்கி வருவதால், ஈரானும் அமெரிக்காவும் இராணுவ மோதலை நோக்கி வேகமாக நகர்வதாகவே இரு தரப்பு அதிகாரிகளும், வளைகுடா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள இராஜதந்திரிகளும் கூறுகிறார்கள்.

மட்டுமின்றி, ஈரானின் வளைகுடா அண்டை நாடுகளும் அதன் எதிரி இஸ்ரேலும் தற்போது ஒரு தீர்வை விட ஒரு மோதலுக்கே அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதுகின்றனர்.
முன்னதாக, வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, ஆனால் ட்ரம்ப் இன்னும் இந்த விடயத்தில் தனது முடிவை உறுதி செய்யவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |