ஐந்து மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளி... இருளில் மூழ்கிய நகரங்கள்
அமெரிக்காவின் ஐந்து மாகாணங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பல பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டக்கி, மிசோரி மற்றும் டென்னசி ஆகிய மாகாணங்களில் வெள்ளிக்கிழமை சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புயல் காரண்மாக குறிப்பிட்ட ஐந்து மாகாணங்களின் முக்கிய பகுதிகளில் 180,000 மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கினர். மேலும், இல்லினாய்ஸில் உள்ள ஒரு அமேசான் கிடங்கின் கூரையின் பகுதி இடிந்து விழுந்தது,
ஆர்கன்சாஸ் முதியோர் இல்லத்தில் சேதமேற்பட்டுள்ளது மற்றும் இந்த ஐந்து மாகாணங்களில் ஏராளமான பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆர்கன்சாஸ் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் 5 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் 20 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீளமான ஒற்றை சூறாவளி இதுவென குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், நான்கு மாகாணங்கள் வழியாக இது கடக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பல கட்டிடங்களில் கூரைகள் சூறாவளியில் சிக்கியுள்ளதாகவும், மரங்கள் வேருடன் சாந்துள்ளதாகவும், மின்கம்பங்கள் சரிந்துள்ளதாகவும், இதனால் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் சூறாவளி தொடர்பில் தேசிய வானிலை சேவை வெள்ளிக்கிழமை இரவு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பகலில் தான் சேதங்கள் தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.