ஜப்பானில் விரைவாக பரவும் இரண்டே நாளில் உயிரை கொல்லும் அரிய நோய்
இரண்டு நாட்களில் கொல்லக்கூடிய அரிய வகை நோய் ஜப்பானில் பரவுகிறது.
STSS
ஜப்பான் நாட்டில் Streptococcal நச்சு அதிர்ச்சி நோய்க்குறி பரவல் அதிகரித்துள்ளது. சூன் 2ஆம் திகதி ஜப்பானை தாக்கிய இந்நோய், கடந்த சில நாட்களாக இந்த அரிய வகை நோய் விரைவாக பரவி வருகிறது.
இதுவரை 977 பேருக்கு இதன் பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. STSS (Streptococcal toxic shock syndrome) எனும் இந்நோய்தொற்று ஏற்பட்டால் 48 மணிநேரத்தில் உயிரைப் பறிக்கும் என்று கூறப்படுகிறது.
2,500ஐ எட்டக்கூடும்
'சதை உண்ணும் பாக்டீரியாவால்' இந்த நோய் ஏற்படும் என Bloomberg தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இந்நோய்தொற்று 941 பேரை தாக்கியதாக பதிவாகியுள்ளது.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தொற்றுநோய்களின் விகிதத்தில், ஜப்பானில் இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை 2,500ஐ எட்டக்கூடும் என்றும், திகிலூட்டும் இறப்பு விகிதம் 30 சதவீதம் இருக்க கூடும் என்றும் மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |