உக்ரைன் போரில் தன் நாட்டு வீரர்கள் நடத்தப்படும் விதம் கண்டு ஏமாற்றம் அடைந்துள்ள கிம் ஜாங் உன்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான தன் நட்புக்காக தன் நாட்டு வீரர்களை உக்ரைன் போருக்கு அனுப்பி வைத்த வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன், தற்போது அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏமாற்றம் அடைந்துள்ள கிம் ஜாங் உன்
கிம் ஜாங் உன், புடினுடன் நட்பு பாராட்டுவதற்காக தன் நாட்டுப் படைவீரர்களை உக்ரைன் போரில் ரஷ்யாவுக்காக போரிடுவதற்காக அனுப்பிவைத்தார்.
ஆனால், அவர்கள் போர்க்களத்தில் முன்னணியில் நிறுத்தப்பட்டு பெரும் அளவிலான தன் வீரர்கள் கொல்லப்படுவதால் கிம் வருத்தம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, வடகொரிய படைவீரர்களை புடின் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பொருட்களைப்போலத்தான் பயன்படுத்தப்போகிறார் என கூறியிருந்தார்.
போர்க்களத்தில் முன்னணியில் நிறுத்தப்பட்டு குண்டுகளை எதிர்கொள்ளும் பொருட்களைப்போலத்தான் வடகொரிய வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என ஜெலன்ஸ்கி கூறியிருந்த நிலையில், தற்போது அதேபோல அவர்கள் வீணாக உயிரிழப்பதால் கிம் புடின் மீது கோபம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே, எதிர்காலத்தில் ரஷ்யாவுக்கு வடகொரியா வழங்கும் உதவியை அதிகரிக்கும் எண்ணம் இப்போதைக்கு வடகொரிய ஜனாதிபதிக்கு இல்லை என கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |