கிம் ஆட்சியில் தூக்கிலிடப்பட்ட 23 பேர்! உண்மையை மறைக்க முயற்சிக்கும் வட கொரியா

North Korea Execution Kim Jong Un K-Pop
By Ragavan Dec 16, 2021 01:32 PM GMT
Report

வடகொரியாவில் கிம் ஜாங் உன் ஆட்சியின் கீழ், குறைந்தது 23 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவில் இருந்து K-pop வீடியோக்களைப் பார்த்து விநியோகித்ததற்காக வட கொரியா தனது குடிமக்களில் குறைந்தது 7 பேரையாவது பகிரங்கமாக தூக்கிலிட்டுள்ளது என்று ஒரு மனித உரிமை அறிக்கை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் கீழ் இந்த மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக Transitional Justice Working Group எனும் நீதிப் பணிக்குழு கண்டறிந்ததாக நியூயார்க் டைம்ஸின் அறிக்கை கூறுகிறது.

Transitional Justice Working Group குழு 2015 முதல் வட கொரியாவில் இருந்து வெளியேறிய மொத்தம் 683 மக்களை நேர்காணல் செய்தது.

வடகொரியாவின் அரசு அனுமதித்த பொது மரணதண்டனைகள் என்று கூறப்படும் இந்த தூக்கு தண்டனைகள் குறித்தும், அந்த மக்கள் கொல்லப்பட்ட மற்றும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காணவும் இந்த நேர்காணலாந்து நடத்தப்பட்டது.

அதன்படி, K-pop வீடியோக்களைப் பார்த்ததற்காக கொல்லப்பட்ட இந்த 7 பேரில், 6 பேர் 2012 மற்றும் 2014-க்கு இடையில் Hyesan-ல் தூக்கிலடப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, கிம்மின் கீழ் குறைந்தது 23 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டதாக குழு மேலும் கண்டறிந்துள்ளது.

இருப்பினும், உண்மையான எண்ணிக்கையைத் தீர்மானிப்பது மிகவும் கடினம் என்பதால் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த மரணதண்டனையின் போது குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் மரணத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக அறிக்கை மேலும் வெளிப்படுத்தியது.

2011-ல் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து, சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் அரசியல் மற்றும் இராஜதந்திர சூழ்ச்சிகளால் சூழப்பட்டுள்ளார்.

தென் கொரிய பொழுதுபோக்கை வட கொரியர்கள் பார்த்தால், அது அவர்களின் மனதை கெடுக்கும் என்று அவர் பல சந்தர்ப்பங்களில் குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற மரணதண்டனை சம்பவங்கள் குறித்து தகவல் வெளிவருவது இது புதிதல்ல.

2016-ஆம் ஆண்டு விசாரணையில், தென் கொரியாவின் உளவு நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுக்குழு, கிம் ஆட்சியில் இருந்த முதல் 5 ஆண்டுகளில், அவர் சுமார் 340 பேரை தூக்கிலிட்டதாகக் கூறியது.

இதில் 2013-ல் அவரது மாமா ஜாங் சாங் தேக் படுகொலை செய்யப்பட்டது மற்றும் 2012-ல் இராணுவ தலைவரான ரி யோங் ஹோவின் கலையெடுப்பு ஆகியவை அடங்கும். இருவரும் கிம் ஆட்சி அதிகாரத்தைப் பெற உதவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US