வடகொரியாவின் இறுதி இலக்கு இதுதான்! பகீர் கிளப்பிய கிம் ஜாங் உன்
உலகின் மிக சக்திவாய்ந்த அணுசக்தியை வைத்திருப்பதே தங்கள் நாட்டின் இறுதி இலக்கு என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
புதிய ஏவுகணை
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட பல ராணுவ அதிகாரிகளுக்கு பதிவு உயர்வு அளிக்கப்பட்டது.
அப்போது புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் Hwasong-17 ஏவுகணையின் சோதனையை ஜனாதிபதி கிம் ஆய்வு ஆய்வு செய்தார். அதன் பின்னர் உலகின் வலிமையான மூலோபாய ஆயுதம் இது என அவர் குறிப்பிட்டார்.
@KCNA via Reuters
மேலும், அணுசக்தியை உருவாக்குவது என்பது மாநிலத்தின் கண்ணியம் மற்றும் இறையாண்மையை நம்பத் தகுந்த வகையில் பாதுகாப்பதற்காகவே என்று அதிகாரிகளை ஊக்குவிக்கும் தனது உத்தரவில் கிம் தெரிவித்தார்.
@Reuters
இறுதி இலக்கு
அத்துடன், 'வடகொரியாவின் இறுதி இலக்கு உலகின் மிக சக்தி வாய்ந்த மூலோபாய சக்தியை, இந்த நூற்றாண்டில் முன்னோடியில்லாத முழுமையான சக்தியைக் கொண்டிருப்பதாகும். வடகொரிய விஞ்ஞானிகள் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை ஏற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் ஒரு அற்புதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்' எனவும் கிம் தெரிவித்தார்.
வடகொரியாவின் அடுத்தடுத்த அணு ஆயுத சோதனைகள் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.