மீண்டும் அதிரடியை தொடங்கிய கிம்-ஜாங் உன்..அதிகரிக்கும் பதற்றம்! ஜப்பானை நோக்கி ஏவுகணைகணை ஏவிய வட கொரியா
வட கொரியா, ஐப்பான் கடலில் தொலை தூரம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா-ஜப்பான் நாடுகள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் மற்றும் அமெரிக்க ஆகிய இரண்டு நாடுகளும் வட கொரியாவின் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பதவியேற்ற பின் வட கொரியா நடத்தும் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை இது என்பது குறிப்பிடத்த்ககது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் படி, ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்துவதாக கருதி ஏவுகனை சோதனை மேற்கொள்ள வட கொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் மஞ்சள் கடலில் குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய பாலிஸ்டிக் அல்லாத ஏவுகணையை சோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்திய வட கொரியா, தற்போது தொலை தூரம் பாயும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது.
ஜப்பான் தனது பிராந்திய கடலுக்குள் ஏவுகணை பாகங்கள் விழவில்லை என்று தெரிவித்துள்ளது. .
இந்த ஏவுகணை சோதனைகள் வட கொரியாவின் சட்டவிரோத ஆயுதத் திட்டம் அதன் அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை காட்டுகிறது என்று அமெரிக்க இராணுவத்தின் இந்தோ-பசிபிக் தளபதி தெரிவித்துள்ளார்.