உக்ரைன் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு நினைவகம் எழுப்பும் கிம் ஜோங் உன்
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான வட கொரிய வீரர்களுக்காக நினைவு மண்டபம் எழுப்ப கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து நீடிக்கும்
இந்த நினைவு மண்டபமானது உக்ரைன் போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் எழுப்பப்பட உள்ளது. மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட கிம் ஜோங்,

ரஷ்யா உடனான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றார். அமெரிக்காவின் தடைகளால் ரஷ்யா நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ள நிலையிலும், வட கொரியா தமது ஆதரவு நிலையில் உறுதியாக உள்ளது.
உக்ரைனில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களை உண்மையான தேசபக்தர்கள் என குறிப்பிட்ட கிம் ஜோங் உன், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஒரு வருடம் அவர்கள் தங்கி போரிட்டதாகவும்,
அவர்கள் தங்கள் உறுதியான மனப்பான்மையால் கொடூரமான நவ-நாஜி படையெடுப்பாளர்களை அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனுக்கு எதிராக போரில் களமிறங்க கிம் 15,000 வீரர்களை அனுப்பியதில், குறைந்தது 600 வட கொரியர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பினர்.
இராணுவ உதவி கோரி ரஷ்ய வீரர்கள் கதறிய அதே பகுதியிலேயே வட கொரிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். உண்மையான தேசபக்தர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனித சரணாலயமாக இது அறியப்படும் என்று கிம் கூறியுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |