ஹெலிகாப்டர், ஏவுகணை உள்ள சிறப்பு ரயில் வைத்துள்ள நாட்டின் ஜனாதிபதி
பொதுவாக நாட்டின் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானத்தில் செல்வதே வழக்கம்.
ஆனால் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் தனது பெரும்பாலான வெளிநாடுகளுக்கு ரயிலை பயன்படுத்தி வருகிறார்.
இந்த ரயில் வடகொரியா ஜானதிபதியின் பயணத்திற்கான தனிப்பட்ட ரயில் ஆகும்.
கிம் ஜாங் உன்னின் சிறப்பு ரயில்
இந்த ரயில் அதிகாரபூர்வமாக Taeyangho என அழைக்கப்படுகிறது. கொரிய மொழியில் இதற்கு சூரியன் என பெயர் ஆகும்.
முன்னதாக ஜனாதிபதியாக இருந்த கிம் ஜாங் உன் தந்தை கிம் ஜாங் இல் மற்றும் தாத்தா கிம் இல் சுங் இந்த ரயிலையே பயன்படுத்தி வந்தனர்.
இந்த ரயில், சுமார் 579 மீட்டர் நீளத்துடன் குண்டு துளைக்காத கண்ணாடிகள் உடைய 20 முதல் 25 கவச பெட்டிகளை கொண்டுள்ளது.
இந்த ரயிலில், கிம்மின் அலுவலகம், படுக்கை அறை, குளியலறை, ஆடம்பர உணவகம், சாட்லைட் போன் வசதி, ஏவுகணை ஏவும் வசதி, விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு வசதி, ஹெலிகாப்டர், 2 கவச மெர்சிடிஸ் கார், டிவி, பாதுகாப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களை அழைத்து செல்ல தனி பெட்டி என பல்வேறு சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் உள்ளது.
இதன் காரணமாக இந்த ரயில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் தான் பயணிக்கிறது.
இதில் உள்ள உணவகத்தில், சீனா, ரஷ்யா, கொரியா, ஜப்பான் மற்றும் பிரெஞ்சு உணவுகள் கிடைக்கும் என இதில் பயணித்த ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவின் பல்வேறு பகுதிகளில் இதற்காக 19 ரயில் நிலையங்கள் உள்ளது. நிலத்தடியில் உள்ள ரகசிய அரண்மனைகளை இந்த ரயிலில் மூலம் மட்டுமே அணுக முடியும்.
ரயில் பயணம் உறுதி செய்யப்பட்ட பிறகு 100க்கும் அதிகமான பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொள்கின்றனர். பாதுகாப்பை சரிபார்க்க ஒரு ஹெலிகாப்டர் மற்றும் கண்ணிவெடி கண்டுபிடிப்பானுடன் கூடிய பாதுகாப்பு ரயில் ஒன்று இந்த ரயிலின் முன்னர் பயணிக்கிறது.
கிம்மின் தாத்தா கிம் இல் சுங் இந்த ரயில் மூலம் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அவர் இறக்கும் வரை ரயில் பயணமே மேற்கொண்டார்.
கிம் முன்னதாக வியாட்நாமில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்திக்கவும், சீனா மற்றும் ரஷ்யா பயணங்களின் போது ரயிலில் சென்றார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் 2ஆம் உலகப்போர் நினைவுதினத்தை முன்னிட்டு மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் ரஷ்யா ஜனாதிபதி புடின் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ரயில் மூலமே, கிம் ஜாங் உன் சீன பயணம் மேற்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |