வடகொரியாவின் அடுத்த ஜனாதிபதி குறித்து வெளியாகிவரும் அதிரவைக்கும் தகவல்
Kim Jong-un's successor is most dangerous woman in world: கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து பொறுப்பேற்க இருக்கும் பெண், உலகிலேயே பயங்கரமான பெண் என செய்திகள் வெளியாகிவருகின்றன.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மூளையில் இரத்தக்கசிவு காரணமாக மரணமடைந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஊடகங்கள் எழுதத் துவங்கியுள்ளன.
கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்
அமெரிக்காவில் வசிக்கும் சீன ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடையவரான வான்ஜுன் ஜை (Wanjun Xie) என்பவர், வடகொரிய ஜனாதிபதியாகிய கிம் ஜான் உங் (42) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை கிம்முக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சீன மருத்துவக்கல்லூரி ஒன்றிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று வடகொரியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார்.
மேலும், கிம் கோமாவுக்குள் சென்றுவிட்டதாகவும், அதைத்தொடர்ந்து பீஜிங்குக்கு அவர் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனாலும், மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாகவும் வான்ஜுன் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் அடுத்த தலைவர்...
ஒரு பக்கம், அந்த செய்தியில் உண்மை இல்லை என்பதை நிரூபிப்பதற்காக வடகொரிய அரசு ஊடகங்கள், கிம் ஜாங் உன் நேற்று கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

ஆனால், இரு தரப்பு செய்திகளையும் உறுதி செய்வதற்கான ஆதாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
இதற்கிடையில், வடகொரியாவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஊடகங்கள் எழுதத் துவங்கியுள்ளன.
அவ்வகையில், கிம் ஜாங் உன்னுக்கு அடுத்து வடகொரிய ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் பெண், உலகிலேயே பயங்கரமான பெண் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
அதாவது, கிம் ஜான் உன்னுடைய இடத்தில், அவரது தங்கையான கிம் யோ ஜாங் (38) வடகொரிய ஜனாதிபதியாக ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அத்துடன், கிம் யோ ஜாங், கிம் ஜாங் உன்னைவிட பயங்கரமானவர் என்றும், அவர் வடகொரிய ஜனாதிபதியானால், நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவத் தளபதியான டேவிட் மேக்ஸ்வெல் கூறும்போது, ஒவ்வொரு முறை ஒரு தலைவர் இறந்து அவருக்குப் பின் புதிதாக மற்றொரு தலைவர் வரும்போதும், அவர் முந்தினவரைவிட மோசமானவராகத்தான் இருப்பார் என்றே நாம் கருதவேண்டியுள்ளது என்கிறார்.
கிம் யோ ஜாங் எப்படி ஆட்சி செய்வார் என்பது தொடர்பில் எந்த ஆதாரத்தையும் நான் பார்த்ததில்லை. என்றாலும், அவரது குடும்ப வரலாற்றைப் பார்க்கும்போது, அவர் இரும்புக் கரம் கொண்டுதான் ஆட்சி செய்வார் என்றே நான் கருதுகிறேன் என்கிறார் டேவிட் மேக்ஸ்வெல்.