சோவியத் தியாகிகளின் சாதனைகளை மறக்கமாட்டோம்: வடகொரிய ஜனாதிபதி கிம்
வடகொரியா, ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு தீராத உந்து சக்தியாக உள்ளது என கிம் தெரிவித்தார்.
வடகொரியாவின் பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்தை கிம் பார்வையிட்டதாக கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது.
நிறைவு விழா
1910 முதல் 1945-ஆம் ஆண்டு வரையிலான ஜப்பானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து கொரியா விடுதலையடைந்ததன் 81-வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
அப்போது சோவியத் இராணுவத்தின் தியாகிகளின் சாதனைகளை நாங்கள் மறக்கமாட்டோம் என்ற வாசகம் கொண்ட மலர்வளையம் மூலம் ஜனாதிபதி கிம்-ஜோங் உன் (Kim-Jong Un) அஞ்சலி செலுத்தினார்.
மேலும், பியோங்யாங்கில் உள்ள விடுதலை நினைவுச் சின்னத்தை அவர் பார்வையிட்டதாக வடகொரியாவின் 'கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு
கிம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், "வடகொரியா மற்றும் ரஷ்யா இடையிலான சிறந்த வரலாறு, மரபுகள் மற்றும் இரத்த உறவு ஆகியவை, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பு உறவுகளுக்கு ஒரு அடிப்படைத் தூணாகவும், தீராத உந்து சக்தியாகவும் தற்போது திகழ்கின்றன" என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் தீவிரமாக ஒத்துழைத்து வருவதாகவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ரஷ்ய ஜனாதிபதி புடின் (Putin) சனிக்கிழமையன்று வாழ்த்து செய்தி அனுப்பியதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |