கிம் ஜாங் உன் - ஜி ஜின்பிங் நேரில் சந்திப்பு: டிசம்பரில் சீனா செல்லும் வட கொரிய ஜனாதிபதி
Kim Jong-un Xi Jinping meeting expected in december: வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் எதிர்வரும் டிசம்பர் மாதத் தொடக்கத்தில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக, சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஜப்பானின் கியோடோ (Kyodo) செய்தி நிறுவனம் இரு நாட்டின் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்போது, பெரிதும் எதிர்பார்க்கபடும் இந்த சுற்றுப்பயணத்தில் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் சீனாவின் எல்லை நகரமான டான்டோங்கிற்கு (Dandong) கிம் ஜாங் உன் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவரை சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழு தலைவர் வாங் ஹுனிங் நேரில் வரவேற்று இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.