அம்பானியை யாரென்றே தெரியாது - திருமணத்தில் வைரத்தை தொலைத்த பிரபல நடிகை
அம்பானி இல்ல திருமணத்தில் பல லட்ச மதிப்புள்ள வைரத்தை தொலைத்து விட்டதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
ஆனந்த் அம்பானி திருமணம்
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்றது.
இதில், இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இருந்தும் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டுத்துறையினர் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையான கிம் கர்தாஷியனும்(kim kardashian), அவருடைய சகோதரா குளோயி கர்தாஷியனும்(khloe kardashian) கலந்து கொண்டனர்.
தொலைந்த வைர நகை
இந்த திருமண நிகழ்வில், கிம் கர்தாஷியன் தன்னுடைய பல லட்சம் மதிப்புள்ள வைரத்தை தொலைத்து விட்டதாகவும் அதை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அம்பானி என்றால் எங்களுக்கு யாரென்றே தெரியாது. நகை வடிவமைப்பாளரான லொரைன் ஸ்வார்ட்ஸ்(lorraine schwartz) எங்களின் நல்ல தோழி. அவர் தான் அம்பானி குடும்பத்திற்கு நகை வடிவமைப்பாளர்.
நான் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்காக இந்தியாவுக்கு செல்கிறேன், அவர்கள் உங்களையும் அழைக்க விரும்புகிறார்கள் என கூறினார். நாங்களும் வர சம்மதித்தோம்.
அதன் பின்னர் எங்களுக்கு 18-20 கிலோ எடையுள்ள திருமண அழைப்பில் வந்தது. அதில் இருந்து இசை கூட வந்தது. இது போன்ற வித்தியாசமான அழைப்பிதழை பார்த்த பின் வர முடியாது என சொல்ல தோணவில்லை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |