வாயை மூடிக்கொண்டிருப்பது அவருக்கு நல்லது! அண்டை நாட்டின் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த கிம்மின் சகோதரி
அணுஆயுத குறித்த கருத்தில் தென் கொரிய ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்த கிம்மின் சகோதரி
தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பகுதியை வடகொரியா ஆயுதத் திட்டங்களில் முதலீடு செய்கிறது
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயொல் வாயை மூடிக்கொண்டிப்பது தான் அவருக்கு நல்லது என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ ஜாங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால், அந்நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயொல் புதன்கிழமையன்று தெரிவித்தார்.
ஆனால், தென்கொரியாவின் கோரிக்கையை மறுத்த நிலையில் வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையில், 'வடகொரியாவின் மரியாதை மற்றும் அணு ஆயுதங்களை பொருளாதார ஒத்துழைப்பு மூலம் அவர் வர்த்தகம் செய்ய நினைப்பது மிகவும் எளிய மற்றும் குழந்தைத்தனமானது. எனவே, அவர் வாயை மூடிக்கொள்வது அவரது உருவத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். சோள கேக்கிற்காக யாரும் அதன் விதியை மாற்றுவதில்லை' என தெரிவித்துள்ளார்.
PC: GETTY IMAGES
கிம் யோ ஜாங்கின் இந்த கடுமையான விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சர் குவான் யாங் சே பதிலளித்துள்ளார். அவர், 'யூன் மீதான கிம் யோ ஜாங்கின் இந்த விமர்சனம் மிகவும் அவமரியாதை மற்றும் அநாகரீகமானது' என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
PC: KIM HONG-JI/POOL/AFP via Getty Images