வடகொரியாவின் பலம் வாய்ந்த தலைவராக விளங்கிய நபர் மரணம்! யார் அவர் தெரியுமா?
வடகொரியாவை நிறுவிய கிம் இல் சங்கின் சகோதரரும், அதிபர் கிம் ஜான் உன்னின் தாத்தாவுமான கிம் ஜோங் ஜு, தன்னுடைய 101 வயதில் உயிரிழந்துள்ளார்.
வடகொரியாவை கடந்த 1948-ஆம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ஆம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜோங் இல் அதிபரானார்.
இவரும் 2011-ஆம் ஆண்டு உயிரிழக்கவே, இவருடைய கடைசி மகனான கிம் ஜாங் உன் தற்போது மூன்றாவது தலைமுறையாக ஆட்சி செய்து வருகிறார். கிம் இல் சங்கின் இளைய சகோதரரான கிகிம் ஜோங் ஜு, தனது சகோதரரின் ஆட்சிக் காலத்தில் வடகொரியாவின் பலம் வாய்ந்த தலைவராக விளங்கினார்.
கிம் இல் சங்குக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில், இவர் இருந்து, நிர்வாகங்களை கவனித்தார். தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு தாத்தா முறையான இவர், கடைசியாக கடந்த 2015-ஆம் ஆண்டு பொதுவெளியில் தோன்றினார்.
அதன் பின், உடல் நிலையால் பாதிக்கப்பட்டிருந்த இவர் பொதுவெளியில் அதிகம் வரவில்லை. இந்நிலையில், இவர் இறந்து விட்டதாக வடகொரியா நேற்று(15.12.2021) அறிவித்துள்ளது.
1920-ஆம் ஆண்டு பிறந்த கிம் ஜோங் ஜு தன்னுடைய 101 வயதில் உயிரிழந்துள்ளார். ஆனால், அவருடைய மரணத்திற்கான காரணம் என்பதை வடகொரியா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.