டாங்கியை ஓட்டி அசத்தும் கிம் மகள்- இராணுவ பயிற்சி புகைப்படங்களை வெளியிட்ட வடகொரியா
வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்னின் 13 வயது மகள், பொதுமக்கள் முன்னிலையில் இராணுவ டாங்கியை ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்வு வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் உலகளவில் பரவியது.
கடந்த சில மாதங்களாக கிம் ஜூ ஏ (Kim Ju Ae) தனது தந்தையுடன் பல்வேறு இராணுவ நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
ஏற்கெனவே ரொக்கெட் ஏவுதல், துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகளிலும் அவர் தந்தையுடன் தோன்றியுள்ளார்.

கின் ஜொங் உன் தனது மகளை அடிக்கடி பொதுவெளியில் அறிமுகப்படுத்திவருவது, அவர் எதிர்காலத்தில் அரசியல் வாரிசாக உருவாக்கப்படுகிறார் என்ற ஊகங்களை வலுப்படுத்துகிறது.
மேலும், இந்த டாங்கி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டதாகவும், ட்ரோன்கள் மற்றும் எதிரி ஏவுகணைகளை தடுக்கக்கூடிய திறன் கொண்டதாகவும் KCNA தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு வடகொரியாவின் இராணவ வலிமையை வெளிப்படுத்துவத்தோடு, அரசியல் வாரிசு குறித்த விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் இந்த ஆயுத காட்சிப்படுத்தல், பிராந்திய அமைதிக்கு அச்சுருத்தல் என அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூறுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kim Jong Un daughter tank, North Korea military parade, Kim family succession, North Korea propaganda video, Kim’s daughter future leader, North Korea military show #NorthKorea #KimJongUn #KimDaughter #MilitaryShow #TankDrive #GlobalNews #AsiaPolitics