இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்த பிரித்தானிய மன்னர் - சிராஜ் விக்கெட் குறித்து சொன்ன வார்த்தை
இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்த பிரித்தானிய மன்னர் சார்லஸ் சந்தித்து பேசியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோற்ற நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் வரும் 23 ஆம் திகதி தொடங்க உள்ளது.
இந்திய மகளிர் அணியும், இங்கிலாந்திற்கு எதிராக, 5 T20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
3-2 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி T20 தொடரை கைப்பற்றியது. முதல் ஒரு நாள் போட்டி நாளை தொடங்க உள்ளது.
இந்திய அணியை சந்தித்த மன்னர்
இந்நிலையில், இன்று லண்டன் செயிண்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள கிளாரன்ஸ் இல்லத்தில் வைத்து, இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியை மன்னர் சார்லஸ் சந்தித்து பேசினார்.
#WATCH | The United Kingdom: King Charles III met the Indian Men's Cricket team at St. James's Palace in London. pic.twitter.com/SjZU0DL6o1
— ANI (@ANI) July 15, 2025
இந்த சந்திப்பின் போது பயிற்சியாளர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அதன் பின்னர் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
#WATCH | The United Kingdom: King Charles III met the Indian Women's Cricket team at St. James's Palace in London. pic.twitter.com/dxZMUBvo2c
— ANI (@ANI) July 15, 2025
சிராஜ் விக்கெட்
மன்னருடனான சந்திப்பு குறித்து பேசிய அணித்தலைவர் சுப்மன் கில், "மன்னர் சார்லஸ் எங்களை அழைத்து சந்தித்தது மிகவும் அன்பான மற்றும் தாராள மனப்பான்மை.
சிராஜ் அவுட் ஆன விதம் துரதிர்ஷ்டவசமானது. பந்து உருண்டு ஸ்டம்பில் விழுந்தது என குறிப்பிட்டார். மேலும், அதன் பின்னர் எப்படி உணர்ந்தீர்கள் என கேட்டார்.
இந்த போட்டி எங்களுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைந்தது. அடுத்த இரு போட்டிகளிலும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறோம் என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |