ஆட்சி பொறுப்பேற்ற பிறகு…மன்னர் சார்லஸின் புதிய முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!
மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் அதிகாரப்பூர்வ உத்தியோக புகைப்படம்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா திகதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ராணியின் மறைவை தொடர்ந்து புதிய அரசராக பொறுப்பேற்றுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ்-சின் முதல் அதிகாரப்பூர்வ வேலைகள் தொடர்பான புகைப்படம் வெளிவந்துள்ளது.
பிரித்தானியாவை சுமார் 70 ஆண்டுகள் ஆட்சி புரிந்த மன்னர் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார்.
PA
இதனை தொடர்ந்து, பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிலையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசராக பணியை தொடங்கியது தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளிவந்துள்ளது.
அதில், அரசர் மூன்றாம் சார்லஸ் தனது அரசாங்க கோப்புகளில் கையொப்பம் இடுவதற்கான தனது பேனாவுடன் இருக்கும் போது படம் பிடிக்கப்பட்டுள்ளார்.
பக்கிங்ஹாம் அரண்மனையின் பிரமாண்டமான 18 ஆம் நூற்றாண்டின் அறைக்குள் அவர் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்த அறையினுள் ராணி இரண்டாம் எலிசபெத் கிறிஸ்துமஸ் செய்திகளை பதிவு செய்தார்.
மேலும் இந்த புகைப்படத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் அருகில் வைக்கப்பட்டு இருந்த சிவப்பு பெட்டியிலிருந்து இடதுபுறமாக உத்தியோகபூர்வ அரசாங்க பணிகளை மேற்கொண்ட போது அவருக்கு பின்னால் அவரது பெற்றோர் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் புகைப்படம் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: சவப்பெட்டியில் ராணி படுத்திருக்கும் வீடியோ! அவரின் மரணம் பல காலம் முன்னரே கணிக்கப்பட்டு விட்டதா?
பிரித்தானியாவின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மன்னர் மூன்றாம் சார்லஸ்-சின் முடிசூட்டு விழா குறித்த திகதி இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது.