பிரித்தானிய மன்னரின் 75வது பிறந்தநாளில் 40 இந்தியர்களுக்கு கவுரவ விருது அறிவிப்பு
பிரித்தானிய மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு, 40க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு கவுரவ விருது அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மன்னரின் பிறந்தநாள் விழா
நவம்பர் மாதம் 14ஆம் திகதி மன்னர் சார்லஸ் தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை வெகுவிமர்சியாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் இந்திய வம்சாவளியினர் சிறப்பிக்கும் வகையில் சிறப்பிக்கப்பட உள்ளனர். அதாவது, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 40க்கும் மேற்பட்ட கவுரவ விருது அளிக்கப்பட உள்ளது.
Hugo Burnand-Pool/Getty Images
பட்டியல் வெளியீடு
இதற்காக பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள 1,171 பேரில் 40க்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி மருத்துவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆவர்.
HENRY NICHOLLS/GETTY IMAGES
பேராசிரியரான புரோகார் தாஸ்குப்தா, தொழிலதிபர் அனுஜ் சண்டே மற்றும் ஹினா சோலங்கி, மருத்துவர் பர்விந்தர் கவுர் அலே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். பிரித்தானியாவின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட பின்னர் மூன்றாம் சார்லஸ் கொண்டாட உள்ள முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |