நாங்கள் பிரித்தானியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை: அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் தம்பதி
பிரித்தானிய தம்பதியினர் நிரந்த இருப்பிடத்தைப் பெறுவதற்கான வயதைத் தாண்டிவிட்டதால் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.
பிரித்தானிய தம்பதி
2015ஆம் ஆண்டு பிரித்தானியாவைச் சேர்ந்த கிளென் டன்னிகிலிஃப் (57), ஷீனா (50) என்ற தம்பதியினர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் பெர்த் நகருக்கு வந்ததில் இருந்து பல்வேறு விசா மாற்றங்களால், நிரந்தரக் குடியுரிமையைப் பெற முடியாமல் போனது. இதன் காரணமாக அவர்கள் இருவரும் 7 வாரங்களுக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
டன்னிகிலிஃப்பின் Plastering திறமைக்கு நாடு முழுவதும் அதிக தேவை இருப்பதால், அவரது குடும்பத்தினர் அனைவரும் வேலை விசாவில் உள்ளனர். ஆனால், அவருக்கு Sponsor செய்யும் நிறுவனம் மூடப்படுவதால் நிரந்தர விசா கிடைக்க வழியின்றி டன்னிகிலிஃப் குடும்பம் தவிக்கிறது.
விசா பிரச்சனை
அத்துடன், புதிய Sponsorஐ தேடுவதில் எந்தப் பயனும் இல்லை. ஏனெனில் வயது வரம்பு காரணமாக அது இன்னும் PRக்கு வழி வகுக்காது என டன்னிகிலிஃப் மனைவி ஷீனா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், 'நாங்கள் பிரித்தானியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை - நாங்கள் இங்கே ஒரு வாழ்க்கையை உருவாக்கி விட்டோம். அவுஸ்திரேலியா எங்களை மிகவும் வயதானவர்கள் என கருதுகிறது, ஆனால் நாங்கள் அனுபவமும், பயிற்சியும் கொண்டவர்கள்' என தெரிவித்தார்.
இந்நிலையில் குடிவரவு சட்ட நிபுணர் ஜோன் கின்ஸ்லர் கூறுகையில், வயதான திறமையான புலம்பெயர்ந்தோரின் வேலை வாழ்க்கை மற்றும் பொருளாதார பங்களிப்புகள், இளைய புலம்பெயர்ந்தோரை விட சிறிய முன்னுரிமையாக இருக்கும் என்றார்.
Nine News
உள்துறை அமைச்சரின் கூற்று
முன்னதாக, உள்துறை அமைச்சர் கிளேர் ஓ 'நீல் அவுஸ்திரேலியாவின் இடம்பெயர்வு முறை உடைந்துவிட்டது என்றும், அடிப்படை மாற்றியமைத்தல் மற்றும் தீவிரமான எளிமைப்படுத்தல் தேவை என்றும் பிப்ரவரி மாதம் கூறினார்.
தம்பதியின் பிள்ளைகளான டாம்சின் (21), மோலி (18) இருவரும் புதிய வாழ்வை தொடங்க பிரித்தானியாவின் கிழக்கு சஸ்செக்சில் இருந்து இடம்பெயர்ந்தனர். ஆனால் அவர்களில் டாம்சின் தனது தொழில் தேர்வு காரணமாக நாட்டில் (அவுஸ்திரேலியா) தங்கலாம். எனினும் மோலி தனது படிப்பின் காரணமாக மாணவர் விசாவிற்கு தகுதி பெறாததால் வெளியேற வேண்டும் என்று கூறப்படுகிறது.
Facebook
இதற்கிடையில், டன்னிகிலிஃப்-ஷீனா தம்பதி Agentகளிடம் இருந்து எப்போதும் சிறந்த ஆலோசனையைப் பெறாத நிலையில், பல ஆண்டுகளாக விசாக்களுக்காக 80,000 டொலர்கள் செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |