முடிசூட்டு விழா கச்சேரியில் மன்னர் சார்லஸ்: இரண்டாவது நாள் கொண்டாட்டங்கள் என்னென்ன!
நேற்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரண்டாவது நாளான இன்றும் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.
பிரித்தானிய மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே-யில் நடைபெற்ற விழாவில் மன்னராக முடி சூட்டிக் கொண்டார்.
பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் பிரித்தானிய ராணி கமிலா இருவரும் பால்கனியில் தோன்றி மக்களிடம் வாழ்த்தினை பெற்றதுடன், ரெட் அரோஸ் ஃப்ளை பாஸ்ட் நிகழ்ச்சியை கண்டு கழித்தனர்.
Sky News
இரண்டாவது நாள் கொண்டாட்டங்கள்
மன்னர் சார்லஸின் முடிசூட்டி விழா நிகழ்வு நேற்று முடிந்து இருந்தாலும், வரும் திங்கட்கிழமை வரை கொண்டாட்டங்கள் தொடரும் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் இன்று ஆயிரக்கணக்கான தெரு பார்ட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மூத்த அரச குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் பெரிய மதிய உணவு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர்.
எடின்பரோவின் டியூக் மற்றும் டச்சஸ் பெரிய மதிய உணவிற்காக கிரான்லீக்கு செல்ல இருக்கிறார்கள், அதே நேரத்தில் இளவரசி ராயல் மற்றும் துணை அட்மிரல் சர் டிம் லாரன்ஸ் ஸ்விண்டனில் சமூக தெரு விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
SkyNews
மேலும் கொண்டாட்டங்கள் தொடர்பாக அரண்மனை செய்தி தொடர்பாளர் வழங்கிய தகவலில், நாடு தழுவிய கொண்டாட்டங்கள் மற்றும் பெரிய மதிய உணவு விருந்துகள் திங்கட்கிழமை வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இன்று மாலை கேட்டி பெர்ரி, லியோனல் ரிச்சி, போன்ற கலைஞர்களால் விண்ட்சர் கோட்டையில் 20,000 பொதுமக்களுடன் நடத்தப்பட இருக்கும் முடிசூட்டு விழா கச்சேரியில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இருவரும் கலந்து கொள்கிறார்கள்.
BBC