மன்னராட்சியை ஒழிக்கவேண்டும்... தேவாலயம் சென்ற மன்னர் குடும்பம் சந்தித்த எதிர்ப்பு
காமன்வெல்த் தின ஆராதனையில் பங்கேற்கச் சென்ற பிரித்தானிய ராஜ குடும்பம், மன்னராட்சிக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அமைப்பினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேர்ந்தது.
மன்னர் குடும்பம் சந்தித்த எதிர்ப்பு
ஞாயிற்றுக்கிழமையன்று லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் காமன்வெல்த் தின ஆராதனை நடைபெற இருந்த நிலையில், ஆராதனையில் பங்கேற்பதற்காக மன்னர் சார்லசின் குடும்பம் அங்கு சென்றது.

அப்போது, அங்கு கூடியிருந்த ஒரு கூட்டம், மன்னராட்சிக்கு எதிராக குரல் எழுப்பியது.
மன்னராட்சியை ஒழிக்கவேண்டும் என்னும் பதாகைகளுடனும், சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ தொடர்பில், மன்னருக்கு என்ன தெரியும் என்று கூறும் பதாகைகளுடனும், ஆண்ட்ரூ தொடர்பில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புகைப்படங்களுடனும் கூடியிருந்த கூட்டம் ஒன்று மன்னராட்சிக்கு எதிராக குரல் எழுப்பியது.

ஆனால், இளவரசர் வில்லியம், கேட் ஜோடியைக் கண்ட ராஜ குடும்ப ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்ப, அதே நேரத்தில் தேவாலய மணிகள் முழங்க, ஆர்ப்பாட்டக்காரர்களின் சத்தம் அமுங்கிப்போனது.
அந்த கூட்டத்தில் மன்னர் குடும்பத்துக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், மன்னராட்சியை எதிர்க்கும், ரிபப்ளிக் (Republic) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |