பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர்: ஒரு சுவாரஸ்ய தகவல்
ஜேர்மன் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு அரசு முறைப்பயணமாக வந்துள்ள நிலையில், பிரித்தானிய மன்னரான சார்லசின் ஜேர்மன் பின்னணி குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர்

ஆம், மன்னர் சார்லஸ் ஜேர்மன் வம்சாவளியினர் ஆவார். அவரது முன்னோர்களில் ஒருவர் ராணி விக்டோரியா.
பிரித்தானியாவை ஆண்ட ராணி விக்டோரியாவின் கணவரான இளவரசர் ஆல்பர்ட் ஒரு ஜேர்மானியர். உண்மையில் அவரது பெயர் Prince Albert of Saxe-Coburg and Gotha என்பதாகும்.

இந்த Saxe-Coburg and Gotha என்பது, ஜேர்மன் வம்சாவளி கொண்ட ஐரோப்பிய ராஜ குடும்பம்.
ராணி விக்டோரியா மறைந்ததும் அவரது மகனான ஏழாம் எட்வர்ட் மன்னரானார். அவரது மகனான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரானதும், அவர் தனது பெயரிலிருந்த Saxe-Coburg and Gotha என்னும் பெயரை மாற்றிவிட்டு, பிரித்தானிய வார்த்தையான விண்ட்ஸர் என வைத்துக்கொண்டார்.

அப்படித்தான் பிரித்தானிய ராஜகுடும்பம் விண்ட்ஸர் குடும்பமானது.
அத்துடன், மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் மனைவியான ராணி மேரியும் ஜேர்மனியுடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.
மேலும், மன்னர் சார்லசின் தந்தையாகிய இளவரசர் பிலிப்பும் ஜேர்மன் வம்சாவளியினர்தான்.
ஆக, இன்று பிரித்தானிய ராஜகுடும்பம் என அழைக்கப்படும் குடும்பத்தின் பின்னணியை எடுத்துப் பார்த்தால், அதில் ஜேர்மன் மூதாதையர்கள்தான் அதிகம் இருப்பார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |