200க்கும் மேற்பட்டோரின் இழப்பால் மனம் உடைந்த மன்னர் சார்லஸ்! வெளியிட்ட செய்தி
ஸ்பெயினில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து பிரித்தானிய மன்னர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
பேரழிவை சந்தித்த வலென்சியா
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தினால் வலென்சியா மாகாணம் பேரழிவை சந்தித்துள்ளது.
இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 என்று கூறப்படுகிறது. மேலும் மாயமானவர்களின் எண்ணிக்கை 2,000 என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் வெள்ளப்பெருக்கினால் வாலென்சியா பாதிக்கப்பட்டது அறிந்து, தானும் ராணி கமிலாவும் மனம் உடைந்ததாக கூறியுள்ளார்.
ஸ்பெயின் மன்னர் ஃபெலிப்பேவுக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில் 'பல உயிர்களின் சோகமான இழப்பிற்கு இரங்கல்' தெரிவிப்பதாக மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
மன்னர் சார்லஸ் வருத்தம்
மேலும் மன்னரின் கடிதத்தில், "பிரித்தானியாவில் உள்ள பலர் ஸ்பெயினுடன் வலுவான, தனிப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளனர். மேலும் நமது நாடுகள் நமக்கு பொதுவான பலவற்றால் பிணைக்கப்பட்டுள்ளன.
பல உயிர்களின் துயரமான இழப்புக்காக உங்களுக்கும், ஸ்பெயின் மக்களுக்கும் எங்கள் உண்மையான மற்றும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பயங்கரமான வாரத்தில் அன்புக்குரியவர்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த அனைவருக்கும் எங்கள் சிறப்பு எண்ணங்கள், பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்கள் உள்ளன" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |