80 வருடங்களுக்கு பிறகு: பொது மக்களுடன் கைகுலுக்கி உரையாடிய மன்னர் மூன்றாம் சார்லஸ்!
80 ஆண்டுகளுக்கு பிறகு வடக்கு அயர்லாந்திற்கு பிரித்தானிய மன்னர் பயணம்.
நாட்டின் சாலைகளில் கூடி இருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கி மன்னர் சார்லஸ் உரையாடல்.
பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது துணைவியார் ராணி கமீலா இருவரும் வடக்கு அயர்லாந்தின் பொதுமக்கள் கூட்டத்தை சந்தித்து வருகின்றனர்.
பிரித்தானியாவின் மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் தனது 96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்தார்.
AP
ராணியின் மறைவிற்கு உலக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரித்தானியாவின் புதிய அரசராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் மூலம் பிரித்தானியாவின் புதிய ராணியாக மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஸின் மனைவி கமீலா ராணியாக மாறியுள்ளார்.
இந்நிலையில், பிரித்தானியா முழுவதும் ஆபரேஷன் ஸ்பிரிங் டைட் சுற்றுப்பயணத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
SKY NEWS
அந்த வகையில் தற்போது வடக்கு அயர்லாந்திற்கு வந்துள்ள பிரித்தானிய மன்னர் மற்றும் ராணி இருவரும் செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் உள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்-தின் பூத உடலை பெற்றுக்கொண்டு லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஒரு அற்புதமான பயணத்தை மேற்கொள்வார்கள்.
இதற்கிடையில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமீலா இருவரும் வடக்கு அயர்லாந்தின் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு முன்னர், ஹில்ஸ்பரோ-வில் நடைபயணத்தின் போது மாட்சிமை பொருந்திய பொதுமக்களிடம் கைகுலுக்கி பேசி வருகிறார்.
ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு பிறகு, பிரித்தானிய மன்னர் வடக்கு அயர்லாந்திற்கு வருகை தந்துள்ளார்.
SKY NEWS
மன்னர் சார்லஸ் இதுவரை 40 முறை வடக்கு அயர்லாந்திற்கு விஜயம் செய்துள்ளார், ஆனால் மன்னராக இதுவே முதல் முறையாகும்.
கூடுதல் செய்திகளுக்கு: தொடர் வீழ்ச்சியில் அமெரிக்க டாலர்: உச்சத்தை தொடும் ரஷ்ய ரூபிள் மதிப்பு
அதன் பின் வடக்கு அயர்லாந்தின் அரச இல்லமான Hillsborough Castle இல் சின் ஃபெய்ன் துணைத் தலைவர் உட்பட அரசியல் தலைவர்களை மன்னர் சந்திக்க உள்ளார் .