தொடர் வீழ்ச்சியில் அமெரிக்க டாலர்: உச்சத்தை தொடும் ரஷ்ய ரூபிள் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் மதிப்பு அதிகரிப்பு.
யூரோ மற்றும் பவுண்ட் மதிப்புகளும் அமெரிக்க டாலருக்கு எதிராக அதிகரிப்பு.
அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு கடந்த ஆகஸ்ட் 31 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை கண்டித்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து அடுத்தடுத்த பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்தனர்.
REUTERS
மேற்கத்திய நாடுகளின் இத்தகைய பொருளாதார தடைகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும், ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகம் செய்து வந்த எரிவாயுவை நிறுத்தியது.
மேலும் ரஷ்யாவிடம் எரிவாயுவை வாங்கும் நாடுகள் அதற்கான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்தாமல் ரஷ்யாவின் பண மதிப்பான ரூபிளை பயன்படுத்த வேண்டும் என ரஷ்யா தெரிவித்தது.
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மேற்கத்திய நாணயத்தை "நம்பகமற்றது" என்று அறிவித்தார்.
EPA
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கடந்த ஆகஸ்ட் 31 முதல் ரஷ்யாவின் ரூபிள் மதிப்பிற்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இரண்டு வாரங்களில் மிக உயர்ந்த மதிப்பை ரூபிள் மதிப்பு அடைந்த பிறகு, டாலருக்கு எதிராக ரஷ்ய ரூபிள் 0.83% உயர்ந்தது, மேலும் காலை 0.01663க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதனைப் போலவே ஐரோப்பாவின் யூரோ மற்றும் பிரித்தானியாவின் பவுண்ட் போன்ற பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும், அமெரிக்க டாலர் சமீபத்தில் சரிவைச் சந்தித்தது.
GETTY IMAGES
அதனடிப்படையில், யூரோ மற்றும் பவுண்ட் ஆகியவை டாலருக்கு எதிராக 0.31% மற்றும் 0.24% அதிகரித்தது காலை முறையே $1.01544 மற்றும் $1.17139க்கு விற்கப்பட்டது.
கூடுதல் செய்திகளுக்கு: ராணியாரின் இறப்பை கணித்தது போலவே: மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பை அறிவித்த ட்விட்டர் பயனர்!
முதலீட்டாளர்கள் அமெரிக்க பணவீக்கம் குறித்த சமீபத்திய தரவுகளுக்காக இன்று திட்டமிடப்பட்டதை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.