கொடூர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மன்னர் சார்லஸ் அஞ்சலி..சிறுவன் அளித்த பரிசு
சவுத்போர்ட்டில் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு பிரித்தானிய மன்னர் சார்லஸ் அஞ்சலி செலுத்தினார்.
துயர சம்பவம்
பிரித்தானியாவின் சவுத்போர்ட் (Southport) நகரில் 17 வயது சிறுவன் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 3 பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பாரிய கலவரத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் உயிர்தப்பிய சில குழந்தைகளை மன்னர் சார்லஸ் நேரில் சந்திப்பார் என தகவல் வெளியானது.
அதன்படி, சவுத்போர்ட்டிற்கு வந்த மன்னர் சார்லஸிற்கு வீதியில் திரண்டிருந்த மக்கள் வரவேற்றனர். அப்போது சிறுவன் ஒருவர் சிவப்பு பாக்கெட் இதயத்தை வழங்கினார்.
இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட மன்னர்
தன்னைப் பார்க்க கூடியிருந்த மக்களுக்கு கைகுலுக்கிய மன்னர் இளம் பெண்ணின் தோளில் அன்புடன் தட்டிக்கொடுத்தார்.
பின்னர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், அட்கின்சன் ஆர்ட் சென்டர் சவுத்போர்ட் வெளியில் வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பூங்கொத்துகள், மலர் காட்சி வழியாக நடுவே நடந்து சென்றார்.
அதனைத் தொடர்ந்து மன்னர் சவுத்போர்ட் டவுன் ஹாலில் உயிரிழந்தவர்களின் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |