அரச குடும்பத்திற்கு முக்கிய வேலைக்கு திறமையான நபரை தேடும் மன்னர் சார்லஸ்! விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனக்கென தனி விமானியை பணியமர்த்தவுள்ளார்.
மன்னர் மற்றும் அரச குடும்பத்திற்கான பயணங்களை திட்டமிடும் பொறுப்புகள் வழங்கப்படும்.
மன்னர் மூன்றாம் சார்லஸ் தன்னையும், மூத்த அரச குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பாக பறக்கவைக்க திறமையான விமானியை தேடிவருகிறார்.
பைலட்கள் பலரும் விண்ணப்பித்துவரும் நிலையில், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் இரண்டு Sikorsky S76 C++ ஹெலிகாப்டர்களை கட்டுப்படுத்துவார்கள், மேலும் அரச குடும்பத்திற்கான பயணங்களை திட்டமிடும் பொறுப்புகள் வழங்கப்படும்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Sikorsky S76 C++ ஹெலிகாப்டர்கள் 15,000 அடி உயரம் (ஒரு பயணிகள் விமானத்தின் பாதி உயரம்) மற்றும் 170 மைல் வேகத்தில் பயணிக்க முடியும்.
காக்பிட்டில் இரண்டு விமானிகளையும், முழு திறனில் 12 பயணிகளையும் ஏற்றிச் செல்ல முடியும்.
தேர்ந்தெடுக்கப்பட்டப்பின், நிரந்தரமான இந்த பணியில் அவர் பைலட் மற்றும் இணை விமானி ஆகிய இரண்டு பொறுப்புகளையும் கையாளவேண்டும்.
இதற்கு நல்ல சம்பளம் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும். இதில் 15 சதவீத முதலாளி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் 25 நாட்கள் வருடாந்திர விடுப்பு ஆகியவை அடங்கும்.
உலகெங்கிலும் உள்ள இங்கிலாந்து இராணுவ நடவடிக்கைகளுக்கு விரைவான ஆதரவை வழங்கும் பிரித்தானியாவின் சினூக் ஹெலிகாப்டர்களின் தாயகமான நார்த் ஹாம்ப்ஷயரில் உள்ள ராயல் ஏர் போர்ஸ் (RAF) ஓடிஹாமில் இந்த வேலை அமையும்.
புதிய பைலட், தி கிங்ஸ் ஹெலிகாப்டர் ஃப்ளைட்டில் இணைவார், இது முன்பு தி குயின்ஸ் ஹெலிகாப்டர் ஃப்ளைட் என்று அழைக்கப்பட்டது. கடந்த மாதம் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த பிறகு பெயர் மாற்றப்பட்டது.