லண்டன் வந்தும் மகனை சந்திக்காமலே சென்ற மன்னர் சார்லஸ்: ரசிகர்கள் ஏமாற்றம்
ஸ்கொட்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த மன்னர் சார்லஸ் லண்டன் வந்தும் தன் மகனான இளவரசர் ஹரியை சந்திக்காமலே லண்டனிலிருந்து வெளியேறிவிட்டார்.
மகனை சந்திக்காமலே சென்ற மன்னர் சார்லஸ்
ராஜகுடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துவிட்ட இளவரசர் ஹரி பிரித்தானியா வரும்போதெல்லாம், அவர் தன் தந்தையை சந்திப்பாரா என ஆவலுடன் எதிர்பார்க்கும் ராஜ குடும்ப ரசிகர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வகையில், பிரபல ஊடகம் ஒன்றிற்கு எதிரான வழக்கு ஒன்றிற்காக லண்டன் வந்துள்ளார் இளவரசர் ஹரி.
அதேபோல, ஸ்கொட்லாந்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த மன்னர் சார்லசும் லண்டன் வந்திருந்தார்.

@PA
இருவரும் சந்திப்பார்களா என பலரும் ஆவலுடன் காத்திருக்க, மன்னர் சார்லஸ் ஹரியை சந்திக்காமலே லண்டனிலிருந்து வெளியேறிவிட்டார்.
இத்தனைக்கும், மன்னர் Lancaster இல்லம் என்னும் இடத்தில் இந்தோனேசிய ஜனாதிபதியுடனான சந்திப்புக்காக வந்திருந்தார்.
ஹரியும் அந்த இடத்திலிருந்து சுமார் 2 மைல் தொலைவிலுள்ள நீதிமன்றத்தில்தான் வழக்கு விசாரணைக்காக வந்திருந்தார்.
என்றாலும் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்காததால் ராஜகுடும்ப ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், மன்னர், நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எந்த சட்டப்படியான நிகழ்வுகளிலும் தலையிடக்கூடாது, அவற்றைத் தவிர்க்கவேண்டும் என்பது விதி.
ஆகவேதான், வழக்கு விசாரணைக்காக வந்த தன் மகனான ஹரியை மன்னர் சந்திக்கவில்லை என்கிறது, பிரபல பிரித்தானிய ஊடகம் ஒன்று.

@PA