மன்னர் மூன்றாம் சார்லஸ் செயலால் அதிர்ச்சிக்குள்ளான நடிகர்கள்: NTAs 2022-யில் ஐ டிவி சோப்பிற்கு மரியாதை
NTAs 2022-யில் மன்னர் மூன்றாம் சார்லஸ் வீடியோ அழைப்பு மூலம் பங்கேற்பு.
விழாவில் கிராமப்புறங்களின் முக்கியத்துவத்தை மன்னர் சார்லஸ் பாராட்டினார்.
ஐ டிவி சோப்பின் 50வது ஆண்டு வெற்றிக்கு மரியாதை செலுத்துவதற்காக NTAs 2022-யின் விருது வழங்கும் விழாவில் திடீரென தோன்றி மன்னர் மூன்றாம் சார்லஸ் எம்மர்டேல் நடிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
செப்டம்பரில் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட நட்சத்திரங்கள் நிறைந்த விழா இறுதியாக இன்று நடைபெற்றது.
வெம்ப்லியில் உள்ள OVO அரங்கில் நடைபெற்ற தேசிய தொலைக்காட்சி விருதுகள் (NTAs 2022) என்ற ஒளிரும் விருதுகள் வழங்கும் விழாவில் லவ் தீவின் எகின்-சு, கேட்டி பைபர், ஜியோவானி பெர்னிஸ் மற்றும் அலிசன் ஹம்மண்ட் ஆகியோர் சிவப்புக் கம்பளத்தில் வருகை புரிந்து திகைக்க வைத்தனர்.
அப்போது வெம்பலியில் (Wembley) உள்ள OVO அரங்கில் இருந்து நேரடியாக ஒளிபரப்பட்ட வீடியோ இணைப்பு மூலம் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தேசிய தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
மன்னரின் திடீர் பங்களிப்பை எதிர்பார்த்திராத எம்மர்டேல் (Emmerdale) நடிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். வீடியோ இணைப்பின் மூலம் நிகழ்ச்சியில் இணைந்து கொண்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் கிராமப்புறங்களின் முக்கியத்துவத்தை பாராட்டினார், மேலும் ஐ டிவி சோப்பின் 50வது ஆண்டுகால மைல்கல்லை கொண்டாட உதவுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
சுக்டென்ஸுக்குச் சொந்தமான எம்மர்டேல் பண்ணை என்று அழைக்கப்பட்டபோது, எனக்கு மிகவும் வயதாகி விட்டதா என்று நான் பயப்படுகிறேன் என அவர் கேலி செய்தார், அதை பெரிய பிரிட்டிஷ் ஏற்றுமதி என்றும் மன்னர் மூன்றாம் சார்லஸ் பாராட்டினார்.
GETTY
அத்துடன் எம்மர்டேலை மிகவும் சிறப்பான தாக்குவது என்னவென்றால், அதன் அசல் எழுத்தாளரான கெவின் லாஃபனின் (Kevin Laffan) பார்வைக்கு அது உண்மையாக இருந்தது, அவர் விவசாயம் என்பது வெறும் வேலை அல்ல, அது ஒரு முழு வாழ்க்கை முறை என்பதை நிரூபிக்க விரும்பியவர் என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல் நடத்திய வட கொரியா: அணு ஆயுத பயிற்சிகளையும் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு
மேலும் தேசிய தொலைக்காட்சி விருதுகள் எம்மர்டேல் செய்த மகத்தான பங்களிப்பை அங்கீகரிப்பது சரியானது, ஐ டிவியின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுபவர்கள் என்னுடன் இணைந்து அன்பான வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.மேலும் அது சமமான வெற்றிகரமான எதிர்காலத்தை விரும்புகிறேன் என மன்னர் தனது சிறப்பு உரையை ஆற்றினார்.