இளவரசர் ஆண்ட்ரூவால் சர்ச்சை... மன்னர் சார்லசை பொது இடத்தில் கேள்வி கேட்ட நபர்
மன்னர் சார்லசுடைய தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவால் ராஜ குடும்பத்துக்கு அவமானம் தொடர்கிறது.
நேற்று, மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் இங்கிலாந்துக்குச் சென்றிருந்த நிலையில், மன்னர் சார்லசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒரு கேள்வியை பொது இடம் ஒன்றில் வைத்து கேட்டார் ஒரு நபர்!
இளவரசர் ஆண்ட்ரூவால் தொடரும் அவமானம்
ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ஆண்ட்ரூவை ராஜ குடும்பத்திலிருந்து விலக்கிவைத்தார் மகாராணியார்.

ஆனால், அவரால் இன்னமும் ராஜ குடும்பத்துக்கு அவமானம் தொடர்கிறது.
ஆம், நேற்று இங்கிலாந்துக்குச் சென்றிருந்த மன்னர் சார்லஸ், எசெக்சிலுள்ள Dedham என்னுமிடத்தில் பொதுமக்களை சந்தித்த நிலையில், ரிச்சர்ட் (Richard Gadd, 73) என்னும் நபர் மன்னரைப் பார்த்து, ’உங்கள் சகோதரரை விசாரிக்கக்கூடாது என பொலிசாருக்கு அழுத்தம் கொடுத்தீர்களா?’ என சத்தமிட்டார்.

உடனடியாக பொலிசார் அவரை ஓரமாக அழைத்துச் சென்றுவிட்ட நிலையில், இந்த மக்களுக்கு நீதி கிடைக்கக்கூடாது என நீங்கள் நினைத்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார் ரிச்சர்ட்.
அதற்கு, ’இன்று நாம் அதற்காக இங்கு வரவில்லை இல்லையா?’ என பொலிசாரில் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்காகத்தான் வந்துள்ளோம் என அழுத்தம் திருத்தமாக பதிலளித்த ரிச்சர்ட், ஆண்ட்ரூவை விடக்கூடாது என மக்களுக்கு தெளிவுபடுத்த இது ஒன்றுதான் வழி என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவரும், நீங்கள் எப்ஸ்டீன் விசாரணையில் உதவுவீர்களா என மன்னரையும் ராணியையும் நோக்கி சத்தமாக கேட்டுள்ளார்.
நேற்று, Dedhamஇலுள்ள நடைபாதைகள் முழுவதும், ஆண்ட்ரூ இளம்பெண் ஒருவர் அருகே நாலு காலில் நிற்கும் புகைப்படம் கொண்ட துண்டுப் பிரதிகளால் நிறைந்திருந்தன.
மன்னரும் ராணியும் அங்கு வரும் முன் உள்ளூர் அதிகாரிகள் அவற்றை வேக வேகமாக அகற்றியுள்ளார்கள்.
இருந்தும், மழை பெய்தததைத் தொடர்ந்து, அவற்றில் சில துண்டுப்பிரதிகள் தரையிலேயே ஒட்டிக்கொண்டிருந்ததால் அவற்றை முற்றிலும் அகற்றமுடியாமல் போயுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |