கனடாவின் மன்னர் நான்தான்... அழுத்தம் திருத்தமாக கூறிய மன்னர் சார்லஸ்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டிவரும் நிலையில், கனடாவின் மன்னர் தான்தான் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் மன்னர் சார்லஸ்.
கனடாவின் மன்னர் நான்தான்...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டிவரும் நிலையில், மன்னர் சார்லஸ் அது குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என பலரும் கவலை தெரிவித்திருந்தார்கள்.
ஆனால், ட்ரம்பின் மிரட்டல் குறித்து சற்றும் கவலைப்படாமல், பதறாமல், தான் அப்படியெல்லாம் சொல்லவேண்டியதில்லை, அது தன் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் நாடு என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியுள்ளார் மன்னர் சார்லஸ்.
ஆம், சமீபத்தில் இத்தாலிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த மன்னர் சார்லஸ், இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, இத்தாலி பிரித்தானிய உறவு குறித்து பேசியதோடு நிறுத்திவிடாமல், முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு விடயம் குறித்தும் பேசினார்.
நாளை Ravennaவுக்குச் செல்லும் நான், பிரித்தானியா மற்றும் கனடாவின் மன்னர் என்னும் முறையில், Ravenna நாஸி ஜேர்மனியிடமிருந்து விடுதலை பெற்றதன் பெரும் பெருமை மிக்க 80ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறேன் என்றார் மன்னர் சார்லஸ்.
Ravennaவை ஜேர்மனியிடமிருந்து விடுவிப்பதில் பிரித்தானிய மற்றும் கனேடிய படைகள் முக்கியப் பங்காற்றின.
ஆக, ட்ரம்பின் மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருக்காமல், காத்திருந்து, சரியான நேரத்தில், உலகமே பார்க்க, இத்தாலி நாடாளுமன்றத்தில், தான்தான் கனடாவின் மன்னர் என பறைசாற்றிவிட்டார் மன்னர் சார்லஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |