பிரித்தானியா வரும் இளவரசர் ஹரி... மகனை சந்திக்கத் துடிக்கும் மன்னர் சார்லஸ்
இளவரசர் ஹரி அடுத்த வாரம் பிரித்தானியா வரும் நிலையில், மன்னர் சார்லஸ் அவரைக் காண ஏங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகனால் மன்னருக்கு உருவான கவலை
இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்றதால், மன்னர் சார்லசால் தன் பேரக்குழந்தைகளான ஆர்ச்சியுடனும் லிலிபெட்டுடனும் நேரம் செலவிட இயலவில்லை.
இளவரசர் ஹரியின் பிள்ளைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் சந்திக்க மன்னர் சார்லஸ் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
மகனை சந்திக்கத் துடிக்கும் மன்னர் சார்லஸ் இந்நிலையில், அடுத்த வாரம், அதாவது, செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, WellChild Awards என்னும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக பிரித்தானியா வருகிறார் இளவரசர் ஹரி.
ஆக, பேரப்பிள்ளைகள் மீதான ஏக்கத்தால், மகனை எப்படியாவது மன்னர் சந்திக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சோகம் என்னவென்றால், ஹரி அடுத்த வாரம் பிரித்தானியா வரும் நிலையில், அவரது பிள்ளைகளான ஆர்ச்சியும் லிலிபெட்டும் ஹரியுடன் பிரித்தானியா வரவில்லை.
அவர்கள் தங்கள் தாயான மேகனுடன் அமெரிக்காவிலேயே தங்கியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |