வீட்டு முற்றத்தில் விளையாடிய குழந்தை! அருகில் வந்து கொண்டிருந்த ராஜநாகம்... நொடி பொழுதில் தந்தை செய்த செயலின் திக் திக் வீடியோ
வியட்நாமில் வீட்டுக்குள் ஒரு ராஜநாகம் நுழைய முயன்றதோடு விளையாடி கொண்டிருந்த குழந்தை அருகில் வர முயன்ற திக் திக் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வியட்நாமின் த்ராங் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த வீடியோ காட்சியில், வீட்டு முற்றத்தில் அமர்ந்து குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தையில் தாத்தா எதையோ கண்டு திடீரென அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
உடனே சுதாரித்துக் கொண்ட குழந்தையின் தந்தை, குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருக்கும் போதே, சுமார் 8 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று வேகமாக வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்தது.
அதற்கு முன்பாவே குழந்தையின் குடும்பத்தினர் வீட்டு கதவை மூடிவிட்டனர்.
இதையடுத்து வீட்டுக்குள் நுழைய முயன்றும் ராஜ நாகத்தால் முடியவில்லை. பின்னர் அங்குமிங்கும் அலைந்த ராஜநாகம் வீட்டை விட்டு வெளியேறியது.
தந்தையின் நொடி பொழுது துணிச்சல் செயலால் குழந்தை காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த திக் திக் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.