கோவிட் இல்லாத நாடாக வட கொரியாவை அறிவித்தார் ஜிம் ஜாங்: ஆச்சரியமான அதிசயம் என பெருமிதம்
- வடகொரியாவை கொரோனா தொற்று இல்லாத நாடாக அறிவித்தார் கிம் ஜாங் உன்
- உலக பொது சுகாதார வரலாற்றில் இவை பதிவு செய்யப்பட வேண்டிய அதிசயம் என பெருமிதம்
வட கொரியாவில் ஜூலை 29ம் திகதிக்கு பிறகு கொரோனா வைரஸ் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் காய்ச்சல் வழக்குகள் ஒன்று கூட பதிவாகவில்லை என அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.
வட கொரியாவில் கடந்த மே மாதத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸின் திரிபு மாதிரியான ஒமிக்ரான் நாட்டில் உள்ள 26 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 4.8 மில்லியன் மக்களை காய்ச்சலில் ஆழ்த்தியது, ஆனால் இந்த எண்ணிக்கையில் ஒற்றை பகுதி மட்டுமே கோவிட் 19 தொற்று என அடையாளம் சூட்டப்பட்டது.
GETTY
இந்த தொற்று பரவலில் மொத்தம் 74 பேர் வரை மட்டுமே இறந்துள்ளதாகவும், பல வார தொற்று வெடிப்புகள் தற்போது குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு தடுப்புகளை தளர்த்துமாறு ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் கிம் ஜாங் உன் நாட்டிற்கு ஆற்றிய உறையில், ஆரம்ப நாட்களில் நூறாயிரக்கணக்கானவர்களை வேகமாக தாக்கிய அவசரகால தொற்றுநோய், பல்வேறு முறையான சுகாதார நடவடிக்கையை தொடர்ந்து தற்போது குறைக்கப்பட்டு இருப்பதாகவும், ஜூலை 29 முதல் கொரோனா வைரஸ் தொடர்புடைய சந்தேகிக்கப்படும் காய்ச்சல்கள் ஒன்று கூட பதிவாகவில்லை என தெரிவித்தாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனமான (KCNA)தெரிவித்துள்ளது.
KCNA / VIA REUTERS
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நாடு குறுகிய காலத்தில் நோய் பரவுவதை முறியடித்து, பொது சுகாதாரத்தில் பாதுகாப்பை மீட்டெடுத்து, வட கொரியாவை மீண்டும் சுத்தமான வைரஸ் இல்லாத மண்டலமாக மாற்றுவதில் நாங்கள் பெற்ற வெற்றி அற்புதமானது. உலக பொது சுகாதார வரலாற்றில் இவை பதிவு செய்யப்பட வேண்டிய அதிசயம் என்றும் கிம் ஜாங் உன்(King Jong Un) தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தாய்லாந்து செல்லும் கோட்டாபய ராஜபக்ச: மனிதாபிமான அடிப்படையில் அனுமதி என தகவல்
sky news
இந்நிலையில் வியாழனன்று கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தனது சகோதரர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தென் கொரியாவின் எல்லைக்கு அப்பால் அனுப்பப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் தான் வட கொரியாவில் தொற்று வெடிப்பதற்கான காரணம் என்று தெரிவித்தாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.