ஆண்டு கணக்கில் தேடப்பட்ட கடத்தல் மன்னன் சிக்கிய சுவாரசியம்!
200 நாடுகளால் தேடப்பட்டு வந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் கொலம்பியா நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் பிரையன் டொன்கியானோ, 40 வயதான பிரையன் மெக்சிகோவை மையமாகக்கொண்டு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மிகப்பெரிய போதைப்பொருள் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருகிறார்.
தன்னுடைய இருபது வயதில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பிரையன், ஒரு கட்டத்தில் மிகப்பெரிய ஆலாக உருவாகியுள்ளார் .
இதன் காரணமாக மெக்சிகோவிற்கு வெளியே போதைப்பொருள் விற்பனையை பிரையன் தொடங்கிய பின் பல்வேறு நாடுகளில் இந்த தொழிலை செய்து வரும் பிரையனுக்கு கீழே 5000 பேர் பணிபுரிகிறார்கள்.
இதனால் பிரையனை 200 நாடுகள் தேடி வருகின்றன. அமெரிக்கா இதுவரை 30-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து பிரையனை பிடிக்க 10 ஆண்டுகளுக்கும் மேலாக முயற்சி செய்து வந்தது.
சாதாரணமாக வெளியே செல்லும் போது கூட 100 பாதுகாப்பு பணியாளர்களுடன் செல்லும் பிரையன் சமீபத்தில் தன்னந்தனியாக தனது காதலியை பார்க்க சென்று காவல்துறையிடம் சிக்கி இருக்கிறார்.
சமீபத்தில் பேஸ்புக் மூலமாக ஒரு மாடலிங் பெண்ணுடன் பிரையனுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ஒருகட்டத்தில் சந்தித்து பேச முடிவு எடுத்த பிரையன் அந்தப் பெண்ணை தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
இதனை ஏற்று அந்த மாடலிங் பெண் கொலம்பியாவிற்கு வந்திருக்கிறார். இருவரும் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டுகழித்து மகிழ்ச்சியாக இருந்திருக்கின்றனர்.
அப்போது உற்சாக மிகுதியால் பிரையன் உடன் இருக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அந்த பெண்.
இதனை கண்ட கொலம்பியா பொலிஸ் அதிகாரி ஒருவர் உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, பிரையன் தங்கியிருந்த விடுதியை சுற்றி 300க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார் பிரையன்.
அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் இருப்பது தனக்குத் தெரியாது என தெரிவித்திருக்கிறார் அந்த பெண்.
அமெரிக்க பொலிசாரிடம் சிக்காமல் இருந்த ஒரு போதை பொருல் விற்கும் பிரையன், காதலியை பார்க்க சென்ற போது ஒரு புகைப்படத்தினால் இப்போது கைதான சம்பவம் உலக நாடுகளை திகைக்க வைத்திருக்கிறது.