ஐந்து பெண்கள் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ: ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்
சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில் மன்னர் சார்லசின் தம்பியான ஆண்ட்ரூ இடம்பெற்றுள்ள புகைப்படம் ஒன்று பிரித்தானிய மன்னரையும் வருங்கால மன்னரையும் ஆத்திரத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது.
ஆத்திரத்தின் உச்சத்தில் மன்னர்

மோசமான பாலியல் குற்றவாளியும், அமெரிக்கக் கோடீஸ்வரருமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த இளவரசர் ஆண்ட்ரூ, பருவம் எய்தாத ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவு வைத்துக்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டு ராஜ குடும்பத்துக்கு பெரும் அவமானத்தைக் கொண்டுவந்தது.
இருந்தாலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்தார் ஆண்ட்ரூ. ஆனால், அவரது குட்டு வெளிப்பட்டுவிட்டது.
ஆம், எப்ஸ்டீன் கோப்புகளில் ஒன்றில், ஐந்து இளம்பெண்கள் வரிசையாக அமர்ந்திருக்க, அவர்களில் ஒருவர் மடியில் தலைவைத்து, மற்ற இளம்பெண்கள் மடிமீது ஆண்ட்ரூ படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில், இளம்பெண்கள் மடியில் ஆண்ட்ரூ சிரித்தபடி படுத்திருக்க, எப்ஸ்டீனுடைய காதலியும் கூட்டாளியுமான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் அதை பார்த்து ரசித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.
விடயம் என்னவென்றால், அந்த புகைப்படம், மன்னர் தன் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடச் செல்லும் Sandringham இல்லத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அது நிச்சயம் மன்னர் சார்லசையும் இளவரசர் வில்லியமையும் ஆத்திரப்படுத்தியிருக்கும் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான ரிச்சர்ட் (Richard Fitzwilliams) என்பவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |