சாதாரண குடிமக்களா..மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்தோம் - ஹரி, மேகன் தம்பதி
Harry and Meghan says king's letter surprised: அரச குடும்பத்தாராக இல்லாமல் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவீர்கள் என்ற மன்னரின் அறிவிப்பினால் தாங்கள் ஆச்சரியமடைந்ததாக ஹரி, மேகன் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாக நடத்தப்படுவார்கள் என்ற மன்னரின் அறிவிப்பால் ஆச்சரியமடைந்துள்ளனர்.
பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது
அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி வெளியேறியதைத் தொடர்ந்து அவருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் ஹரியும், மேகனும் இனி அரசு குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டது.
பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள ஹரி மற்றும் மேகன் சாதாரண குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்று மன்னர் சார்லஸ் அறிவிப்பு மூலம் உறுதி செய்தார்.
ஆச்சரியமாக இருக்கிறது
இந்த நிலையில் ஹரி, மேகன் தம்பதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை; இது சற்று ஆச்சரியமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், மன்னரின் அறிவிப்பு வெளியிடப்பட்டது தம்பதியினருக்கு எதிர்பாராத ஒன்றாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானிய தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கான திட்டங்கள் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கமளித்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |