எப்ஸ்டீன் விவகாரம்... இளவரசர் ஆண்ட்ரூ - ஃபெர்கிக்கு எதிராக உக்கிர முடிவெடுத்த மன்னர் சார்லஸ்
எப்ஸ்டீன் விவகாரம் மீண்டும் பரபரப்பாகியுள்ள நிலையில், இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தம்பதி இந்த ஆண்டு அரண்மனை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என சார்லஸ் மன்னர் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்வையில் படவேண்டாம்
இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தம்பதி தனது பார்வையில் படவேண்டாம் என்றும் மன்னர் சார்லஸ் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில், 2011 ஆம் ஆண்டில், மீண்டும் ஒருபோதும் தன்னைத் தொடர்பு கொள்ள மாட்டேன் என்று பகிரங்கமாக சபதம் செய்த பின்னர், ஜெஃப்ரி எப்ஸ்டீனிடம் மன்னிப்பு கேட்டு ஃபெர்கி மின்னஞ்சல் அனுப்பிய விவகாரம் அம்பலமானதைத் தொடர்ந்து சார்லஸ் மன்னர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும், எப்ஸ்டீனால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தப்பட்ட நேரத்தில் ஃபெர்கி அந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். இந்த நிலையில், மொத்தமாக 7 தொண்டு நிறுவனங்கள் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தம்பதியை கைவிட்டுள்ளது.
அத்துடன் முக்கிய பொறுப்பில் இருந்தும் சாரா பெர்குசன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நல்லதைச் செய் என மன்னரால் எச்சரிக்கப் பட்டுள்ள ஆண்ட்ரூ, கடந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அழைக்கப்படவில்லை.
தற்போது இந்த ஆண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மன்னராக சார்லஸ் முடிசூட்டிக்கொண்டதன் பின்னரே, நீண்ட 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023ல் முதல் முறையாக சாண்ட்ரிங்ஹாம் கூடுகையில் ஃபெர்கி கலந்து கொண்டார்.
மின்னஞ்சல் தொடர்பில்
1986ல் திருமணம் செய்துகொண்ட இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தம்பதி 1996ல் விவாகரத்து பெற்றனர். இருப்பினும், அரச குடும்பத்து மாளிகை ஒன்றில் இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு வின்ட்சர் மாளிகையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் இருவரும் கலந்துகொண்டனர். 2011ல் வெளியான தகவலில், எப்ஸ்டீனிடமிருந்து 15,000 பவுண்டுகள் பெற்றதற்காக ஃபெர்கி மன்னிப்பு கேட்டிருந்தார்.
ஆனால், ரகசியமாக ஃபெர்கி மின்னஞ்சல் தொடர்பில் இருந்துள்ளார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. எப்ஸ்டீன் விவகாரத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றே இளவரசர் ஆண்ட்ரூ சாதித்து வருகிறார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |