ஒரே ஓவரில் 30 ஓட்டங்கள் விளாசிய பொல்லார்ட்! மும்பை இந்தியன்ஸ் கம்பீர வெற்றி (வீடியோ)
ILT20 தொடர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துபாய் கேபிட்டல்ஸை வீழ்த்தியது.
123 ஓட்டங்கள் இலக்கு
அபுதாபியில் நடந்த ILT20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
Local authorities have reported multiple unidentified flying objects over the stadium 🛸💥#ILT20 pic.twitter.com/uCiWT6YpjQ
— FanCode (@FanCode) December 27, 2025
முதலில் ஆடிய துபாய் கேபிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களே எடுத்தது. நபி 22 ஓட்டங்களும், நீஷம் 21 ஓட்டங்களும் எடுத்தனர். கசன்ஃபர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியில் ப்ளெட்சர் 21 ஓட்டங்களும், வசீம் 27 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பொல்லார்ட் அதகளம்
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கிரோன் பொல்லார்ட் (Kieron Pollard) சிக்ஸர் மழை பொழிந்தார். டாம் பேன்டன் அவருடன் பார்ட்னெர்ஷிப் அமைத்தார்.

இந்த கூட்டணியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 16.4 ஓவரிலேயே 126 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 44 ஓட்டங்கள் விளாசினார். டாம் பேன்டன் (Tom Banton) 20 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |