முதல் பந்திலே இறங்கி வந்து சிக்ஸர் அடித்த இஷான்! எதிர்பார்க்காத இலங்கை வீரர்கள்: வைரலாகும் வீடியோ
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இஷான் கிஷான் தான் சந்தித்த முதல் பந்திலே சிக்ஸர் அடித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின் ஆடிய இந்திய அணி 36.4-வது பந்திலே இலக்கை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சர்வதேச அளவில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இஷான் கிஷன் 42 பந்தில் 59 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Ishan Kishan has announced his arrival in ODIs, IN STYLE! ?
— Sony Sports (@SonySportsIndia) July 18, 2021
Tune into Sony Six (ENG), Sony Ten 1 (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/QYC4z57UgI) now! ?#SLvINDOnlyOnSonyTen #HungerToWin #IshanKishan pic.twitter.com/X6AvW5ADnz
தன்னுடைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்த இவர், இதற்கு முன்பு தன்னுடைய முதல் டி20 போட்டியிலும் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
இந்நிலையில், இவர் இந்த போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், தான் சந்தித்த முதல் பந்திலே இறங்கி வந்து அபார சிக்ஸர் அடித்தார்.
Ishan Kishan making his ODI debut on his 23th BD. Hits first two balls of his career for 6 and 4. #INDvsSL #ishankishan #SLvsIND #SLvIND pic.twitter.com/K6lcck9Yv0
— Harsha (@Harsha4141) July 18, 2021
ஆட்டத்தின் 5.4-வது பந்தை, இலங்கை அணியின் துணைக் கேப்டனும், சுழற்பந்து வீச்சாளருமான Dhananjaya de Silva வீசினார்.
அப்போது கொஞ்சம் கூட பயமின்றி, இஷான் கிஷான் இறங்கி வந்து சிக்ஸர் அடித்து மிரட்டினார். இதைக் கண்ட இலங்கை வீரர்கள் சிலர் அசந்து போனது போன்று ரியாக்ஷன் கொடுத்தனர்.