கைவிட்ட கோஹ்லி, ரோஹித்: சிக்ஸர் அடித்து சதம் விளாசி கேஎல் ராகுல்..நிமிர்ந்த இந்திய அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கே.எல்.ராகுல் சதம் விளாச இந்தியா 284 ஓட்டங்கள் குவித்தது.
கில் 56 ஓட்டங்கள்
ராஜ்கோட்டில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
Photo: BCCI/X
நியூசிலாந்து நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
ரோஹித் ஷர்மா 24 ஓட்டங்களிலும், கில் 56 ஓட்டங்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் 8 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.
Photo: BCCI/X
நிதானமாக ஆடிய விராட் கோஹ்லி (Virat Kohli) 23 ஓட்டங்கள் (2 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் கிளார்க் ஓவரில் போல்டு ஆனார்.
Photo: BCCI/X
கேஎல் ராகுல் சதம்
பின்னர் ஜடேஜா 27 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி தடுமாறியது. அப்போது கே.எல்.ராகுல் (KL Rahul) அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தார். அவர் 49வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி 8வது சதம் அடித்தார்.
Photo: BCCI/X
அதனைத் தொடர்ந்து கடைசி ஓவரில் 2 பவுண்டரிகளை விரட்ட, இந்திய அணி 50 ஓவர்களில் 284 ஓட்டங்கள் குவித்தது.
கடைசிவரை களத்தில் நின்ற கேஎல் ராகுல் 92 பந்துகளில் 112 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 11 பவுண்டரிகள்) விளாசினார். கிறிஸ்டியன் கிளார்க் (Kristian Clarke) 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Photo: BCCI/X
Photo: BCCI/X
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |