ஐபிஎல் போட்டியில் விளையாடாததற்கு இதுதான் காரணமா? கே.எல்.ராகுலுக்கு குவியும் வாழ்த்து
2025 ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டியில் பங்குபெறாத கே.எல்.ராகுல்
ஐபிஎல் தொடரின் 3வது நாளான நேற்று, ஆந்திரா மாநில விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் டெல்லி கேபிட்டல்ஸ் 9விக்கெட் இழப்பிற்கு, 211 ஓட்டங்கள் எடுத்து கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
கடந்த 2022 ஐபிஎல் தொடர் முதல் அந்த அணியின் அணித்தலைவராக இருந்த கே.எல்.ராகுலை, லக்னோ அணி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் டெல்லி அணி ரூ.14 கோடிக்கு கே.எல்.ராகுலை வாங்கியது. இதனால் கே.எல்.ராகுல் லக்னோ அணிக்கு எதிராக ஆடுவதை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
ஆனால் இந்த போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடவில்லை.
கே.எல்.ராகுல் அதியா தம்பதிக்கு பெண் குழந்தை
காரணம் கர்ப்பமாக இருந்த கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட சென்றிருந்ததால், கே.எல்.ராகுல் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தம்பதிக்கு ரசிகர்கள், சக கிரிக்கெட் வீரர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மார்ச் 30 ஆம் திகதி, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கே.எல்.ராகுல் இடம் பெறுவார் என கூறப்படுகிறது.
அதியா ஷெட்டி பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். இவர், ஹீரோ, முபாரகன், நவாப்சதே, மோதிச்சூர் சக்னாச்சூர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட காலமாக காதலித்து வந்த கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |