இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரருக்கும் பிரபல நடிகைக்கும் விரைவில் திருமணமா?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல் ராகுலுக்கும், நடிகை அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அதியா பதிலளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான வீரராக இருப்பவர் கே.எல்.ராகுல். இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளததால் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் சிகிச்சைக்காக அவர் ஜேர்மனிக்கு சென்றுள்ளார். அவருடன் நடிகை அதியாவும் சென்றுள்ளார். ஏனெனில் கே.எல் ராகுலும், அதியாவும் காதலிப்பதை வெளிப்படையாக கடந்தாண்டு சமூகவலைதளம் மூலம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராகுலுக்கும், அதியாவுக்கும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக இன்ஸ்டாவில் பதிவிட்ட அதியா, இன்னும் 3 மாதங்களில் நடக்கும் இந்த திருமணத்திற்கு நான் அழைக்கப்படுவேன் என்று நம்புகிறேன் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.