67 பந்தில் 152 ரன் விளாசிய கே.எல்.ராகுல்! பஞ்சாபிற்கு 265 ரன் இலக்கு
ஐபிஎல் 2026 போட்டியில் கே.எல்.ராகுல் 152 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 264 ஓட்டங்கள் குவித்தது.
கே.எல்.ராகுல் சதம்
டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி முதலில் துடுப்பாடியது. நிசங்கா 11 ஓட்டங்களில் வெளியேற, கே.எல்.ராகுல் மற்றும் நிதிஷ் ராணா கூட்டணி வாணவேடிக்கை காட்டியது.
இதன்மூலம் ஜெட் வேகத்தில் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. கே.எல்.ராகுல் 47 பந்துகளில் சதம் விளாசினார்.
264 ஓட்டங்கள் குவித்த டெல்லி
சதத்தை நோக்கி பயணித்த நிதிஷ் ராணா 91 (44) ஓட்டங்களில் இருந்தபோது பார்ட்லெட் ஓவரில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதிவரை களத்தில் நின்ற கே.எல்.ராகுல் 67 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 152 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் குவித்தது. அர்ஷ்தீப் சிங், பார்ட்லெட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |