படாத இடத்தில் பட்ட பந்து.,வலியால் துடித்த கே.எல்.ராகுல்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் ஜேடன் சீல்ஸ் வீசிய பந்து கே.எல்.ராகுலை பலமாக தாக்கியது.
கே.எல்.ராகுல்
டெல்லியில் நடந்து டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 390 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து 121 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.
ஜேடன் சீல்ஸ் (Jayden Seales) வீசிய ஓவரில் கே.எல்.ராகுல் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து வேகமாக அவரது கால்களுக்கு இடையில் தாக்கியது.
இதனால் வலியால் துடித்த கே.எல்.ராகுலுக்கு களத்தில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. சிறிது நேரம் தாமதத்திற்கு பிறகு கே.எல்.ராகுல் மீண்டும் துடுப்பாட்டம் செய்தார்.
இதற்கிடையில் ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |